தினமும் ஒரு அப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

8
8

ஒரு நாளைக்கு ஓர் அப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டாம்” என்பது ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான பழமொழி. அப்பிள் பற்றி சுவையான தகவல்கள்:

அமெரிக்காவில் மட்டும் 2,500 வகையான அப்பிள்கள் விற்கப்படுகின்றன.

அப்பிள்களில் கொழுப்பு, சோடியம் ஆகியவை கிடையாது. நார்ச்சத்து அதிகம்.

ஓர் அப்பிள் மரத்தில் முதல் பழம் பழுப்பதற்கு நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகலாம்.

குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல் வெளியில் வைத்தால் 10 மடங்கு வேகமாக அப்பிள் பழுத்துவிடும்.

அப்பிள் பழங்கள் தண்ணீரில் மிதக்கும். காரணம், அவற்றின் 25% காற்று.

ஓர் அப்பிள் மரத்தின் சராசரி ஆயுட்காலம் 100 ஆண்டுகள்.

ஒரு மனிதர் ஏறத்தாழ ஆண்டுக்கு 65 அப்பிள்கள் உட்கொள்கிறார்.

ஒரு நாளைக்கு ஓர் அப்பிள் என்ற கணக்கில் சாப்பிட்டால், உலகத்திலுள்ள 7,000க்கும் அதிகமான அப்பிள் வகைகளைச் சாப்பிடுவதற்கு 20 வருடங்களுக்கும் மேல் ஆகும்.