முள்ளங்கியின் அற்புத மருத்துவ பயன்கள்

1618314392 1681
1618314392 1681

முள்ளங்கியை பலர் சீண்டுவதே இல்லை. அது ஏதோ ஒதுக்கப்பட்ட காய்கறி போல அதை பலர் விரும்புவதும் இல்லை.

சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி. சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் முள்ளங்கியை வேக வைத்து, அந்த நீரை குடித்து வர சிறுநீரக கற்கள் முற்றிலும் கரைந்து போகும். தொடர்ந்து முள்ளங்கியை பயன்படுத்தி வர மீண்டும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.

நல்ல குரல் வளம் பெற முள்ளங்கி பெரிதும் பயன்படுகிறது. முள்ளங்கி சாரெடுத்து இளம் சூட்டில் காலையில் குடித்து வர குரல் வளம் பெறும். தெளிவான பேச்சு வரும்.

தொண்டை தொடர்பான பிரச்னைகளையும் தீர்க்கிறது. முள்ளங்கி விலை மலிவாக கிடைக்கும் ஒரு காய்கறியாகும். இதன் பயன்களை குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அதை சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமையாகும்.

பித்தப்பையில் கற்களும் தோன்றாது, ரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கப்படும், ரத்தத்தில் பிராணவாயுவும் அதிகமாகும்.