வாழைப்பழத்தின் ஊட்டச்சத்துகள் மற்றும் நன்மைகள்!

banana benefits min
banana benefits min

வாழைப் பழத்தில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் விற்றமின்கள் சி மற்றும் பி 6 பெறுவதற்கும் சிறந்த பழமாகும்.

வாழைப்பழம் (100 கிராம்) அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்:

கலோரிகள்: 89
நீர்: 75%
புரதம்: 1.1 கிராம்
கார்போஹைட்ரேட்ஸ்: 22.8 கிராம்
சர்க்கரை: 12.2 கிராம்
நார்: 2.6 கிராம்
கொழுப்பு: 0.3 கிராம்

வாழைப்பழங்கள் வீக்கத்தைக் குறைப்பதற்கும், நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பதற்கும், எடை குறைப்பதற்கு, நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கும், இரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்வதற்கும் உதவுகின்றன.
வாழைப்பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

வாழைப்பழங்கள் இதயத்திற்கு நல்லது. உயர் இரத்த அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும் உதவும்.
மன அழுத்தத்தை குறைக்க வாழைப்பழங்கள் உதவுகிறது. விற்றமின் பி 6 தூக்கத்தைத் தூண்டும். மேலும் மக்னீசியம் தசைகளை தளர்த்த உதவுகிறது. பொதுவாக, வாழைப்பழங்கள் ஒரு சிறந்த எடை குறைப்பு உணவாகும்.
விற்றமின் நிறைந்துள்ளது. கண்களைப் பாதுகாக்கவும், சாதாரண பார்வையை பராமரிக்கவும், பார்வையை மேம்படுத்தவும் உதவும். விற்றமின் ஏ உங்கள் கண்களைச் சுற்றியுள்ள சவ்வுகளைப் பாதுகாக்கும் சேர்மங்களைக் கொண்டுள்ளது.

விற்றமின் சி இரும்புச்சத்தை நன்றாக உறிஞ்ச உதவுகிறது. எலும்பு, உடல் ஆகியவற்றை இணைக்கும் கொலாஜென் என்னும் புரதம் இயங்க விற்றமின் சி உதவுகிறது. வாழைப்பழங்களை மிதமாக உட்கொள்வது சிறுநீரக புற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம். வாரத்திற்கு நான்கு முதல் ஆறு வாழைப்பழங்கள் சாப்பிடும் பெண்கள் சிறுநீரக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை பாதியாக குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்பகால நீரிழிவு நோயைத் தடுக்க வாழைப்பழங்களும் உதவும். கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை கர்ப்பகால நீரிழிவு நோய்க்கு வாழைப்பழங்களில் உள்ள மெக்னீசியம் ஒரு நல்ல இரவு ஓய்வை தரும். அதிக நார்ச்சத்து உள்ளதால் வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் உங்கள் குடல் இயக்கம் சீராக இருக்க உதவும்.