முக வீக்கத்தை குறைக்க உதவும் வாழைப்பழ தோல்!

1607164667 513
1607164667 513

வாழைப்பழம் இயற்கையாகவே மருத்துவகுணம் நிறைந்தது. இதனை சாப்பிட்டால் ஆரோக்கியம் உண்டாகும், இதன் தோல்களை பயன்படுத்தினால் அழகு அள்ளும். வாழைப்பழத்தோலை பயன்படுத்தி முகப்பருக்கு நிரந்தர தீர்வு காணலாம்.

முகப்பருக்களால் பொலிவிழந்து காணப்படும் சருமத்தை மிருதுவாக்கவும், மெருகேற்றவும் வாழைப் பழத்தோல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வாழைப் பழத்தோலை வைத்து சில ஃபேஸ் பேக்குகளை வீட்டிலேயே போட்டுக் கொள்ளலாம்.

வாழைப்பழத்தோலுடன் பால் சேர்த்து ஃபேஸ் பேக் செய்வதை பார்க்கலாம். முதலில் காய்ச்சாத பாலை முகத்தில் தடவி சற்று உலர்ந்ததும் காட்டனால் முகத்தை துடைக்கவும். பின் வாழைப்பழத்தோலின் உள் பகுதியை முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவுறும்.

வாழைப்பழத்தோல் மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி ஒரு 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்வதனால் முகப்பருக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

வாழைப்பழத்தோலுடன் மஞ்சள் தூள் சேரும் போது முகம் பிரகாசமாகும். வாழைப்பழத்தோலுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவவும். முகப்பரு பிரச்னையால் முகத்தில் உண்டாகும் வீக்கத்தை குறைக்க இந்த ஃபேஸ் பேக் உதவும். இதை வாரத்தில் இரண்டு முறை மட்டுமே செய்ய வேண்டும்.