அரிசி கழுவிய நீரின் பயன்கள்

1605603433 2491
1605603433 2491

தினமும் வீட்டில் சமைக்க அரிசி குறைந்தது அரை மணி நேரம் அல்லது 15 நிமிடங்கள் ஊறவைப்போம்.

அரிசி ஊறவைத்த நீரை தண்ணீரை இனிக் கீழே ஊற்றாமல் பத்திரப்படுத்தி உங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்து தலைக்குக் குளிக்கலாம். இல்லையெனில் தலைக்குக் குளித்தபின் இறுதி நீராக இந்த அரிசி தண்ணீரை ஊற்றி அலசலாம்.

நீங்கள் வழக்கமாக செய்வது போல் உங்கள் முடியை ஷாம்பு மற்றும் கன்டிசனர்களைப் பயன்படுத்திக் கழுவிய பின்னர் இறுதியாக அரிசி ஊறவைத்த நீரை பயன்படுத்தி முடியை கழுவ வேண்டும்.

இதில் இந்த நீரை 12 முதல் 24 மணி நேரம் வரை சாதரணமாக பாத்திரத்தில் வைத்துவிட்டு பின்னர் பயன்படுத்தினால் நல்ல பலனைத் தரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து இப்படிச் செய்து வருவதன் மூலம் முடி ஆரோக்கியத்துடனும், போஷாக்குடனும் வளரும்.

பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும்.

அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.