மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து வருவதன் நன்மைகள்!

1632135930 421
1632135930 421

மணத்தக்காளி கீரையின் காய், பழம், தண்டு, கீரை போன்ற அனைத்து பாகங்களுமே உடலுக்கு நன்மை தரக்கூடியது. நமது முன்னோர்கள் கீரை வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து வந்ததால் தான் வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் எந்தவித நோய் நொடிகளும் இல்லாமலும் உயிர் வாழ்ந்தனர். நாம் குறைந்த அளவு நீரினை குடிப்பதாலும் மேலும் உப்புத்தன்மை அதிகம் கொண்ட உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதாலும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுகின்றன.

மணத்தக்காளி கீரை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலமாக சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய தொடங்கும். மணத்தக்காளி கீரை சாப்பிடுவது மூலமாக சிறுநீர் பெருகி சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். வாய் மற்றும் வயிற்றில் புண்கள் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வருவதன் மூலமாக வாய்ப்புண் மிக விரைவில் குணமடையும்.

காச நோயானது ஒருவகையான கிருமிகள் உடலுக்கு உட்பகுதியில் உள்ள நுரையீரலில் தங்கிக்கொண்டு நுரையீரலின் உள் உறுப்புகளை பாதிக்கும். அதன் காரணமாக வறட்டு இருமல், மூச்சு திணறல் போன்றவை ஏற்படக்கூடும். காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி மணத்தக்காளி கீரையை அல்லது அதன் பழங்களையும் சாப்பிட்டு வருவதன் மூலமாக காச நோயின் கொடுமையில் இருந்து விடுபடலாம்.