இன்று இதுவரை 1,509 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

corona 2
corona 2

நாட்டில் மேலும் 673 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று கொவிட் தொற்று உறுதியான 836 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அதற்கமைய, இன்று இதுவரையில் 1,509 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 506,000 ஆக அதிகரித்துள்ளது.