முருங்கை விதைகளை பயன்படுத்தி நோய்களுக்கு தீர்வு காணலாம்!

1616668208 4362
1616668208 4362

முருங்கையின் காய், இலை, பூ, விதை என அனைத்துமே மருத்துவ பயனுடையது. முருங்கை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யில் 30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை செல்களை ஆரோக்கியமாக பாதுக்காக்கும்.

முருங்கை விதையை நன்றாக காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர உடலுக்கு நல்ல பலத்தை தரும். இரத்த சோகையை நீக்கும். இதயத்தைப் பலப்படுத்தும். நரம்புகளும், எலும்புகளும் பலப்படும்.

ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி இதற்கு உண்டு. பொடியை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

முருங்கை விதையில் ஆன்டிஆக்ஸிடன்ட், துத்தநாகம், விற்றமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கை விதையை அதிகமாக ஆண்மை அதிகரிக்கும் லேகியங்களில் சேர்ப்பதுண்டு.

முருங்கை விதை: பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும்.

விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.

முருங்கை விதையிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இவ்விதையின் எண்ணெய்யுடன் சம அளவு கடலை எண்ணெய் சேர்த்து மூட்டு வலிக்கு தடவினால் மூட்டு வலி குணமாகிறது.