கண்களை சுற்றி ஏற்படும் கருவளையத்தை போக்க உதவும் குறிப்புகள்

1568273417 0789
1568273417 0789

புகைபிடித்தல் பழக்கம் இருப்பவர்களுக்கும் கருவளையம் மற்றும் வயதான தோற்றத்தை ஏற்படுகிறது. எனவே புகைப்பிடிப்பதை அறவே தவிர்த்து விடுவது நல்லது.

குறைந்த கொலாஜன் உற்பத்தி கண்களுக்குக் கீழே இருண்ட வட்டங்களுக்கு வழிவகுக்கும், எனவே கொலாஜன் உற்பத்தி செய்யும் உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது.

உங்கள் கண்களை அடிக்கடி தேய்க்கும் பழக்கம் இருந்தால் கருமையான வட்டங்கள் அடிக்கடி தோன்றும். கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அடிக்கடி கண்களை தேய்ப்பதாலும் கருவளையம் ஏற்படுகிறது.

தோலில் ஏற்படும் அதிகமான ‘பிக்மெண்டேஷன்’ காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது. இது இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைவு காரணமாகவும் ஏற்படுகிறது.

மனவருத்தம், மனஉளைச்சலால் அவதிப்படுபவர்களுக்கு கருவளையம் ஏற்படுகிறது. எனவே எப்போதும் ரிலாக்ஸாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டால் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம்.

அதிகப்படியான வேலை செய்பவர்களுக்கும் கருவளையம் ஏற்படும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இதனை தடுக்க முடியும். உதாரணமாக வெளியே வெயிலில் செல்லும்போதும், கணினியில் வேலை செய்யும் போதும் கண்ணாடி அணிந்தால் கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.