பச்சை மிளகாயை ஒதுக்காதீர்கள்!

09 1402285196 green chillies
09 1402285196 green chillies

காரம் என்பதால் பெரும்பாலும் அனைவரும் பச்சை மிளகாயை தவிர்த்து விடுவர். ஆனால், அதில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. அதன் தொகுப்பே இது…
பச்சை மிளகாயில் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் இருக்காது. அதைவிட பச்சை மிளகாயில் இருப்பது விற்றமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள்தான். பச்சை மிளகாயில் விற்றமின் சி அதிகம். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும், நோய்த் தொற்று பரவாமல் காத்திடும். பச்சை மிளகாய் மென்று சாப்பிட்டால் எச்சில் அதிகமாக சுரக்கும். இதனால் உணவுப்பொருள் எளிதாக ஜீரணமாகும்.

பச்சை மிளகாயில் இருக்கும் விற்றமின் சி இரும்புச்சத்தை கிரகித்துக் கொள்ள உதவிடும். அனீமியாவை எதிர்த்துப் போராடும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாத்திடும். பச்சை மிளகாயில் இயற்கையாகவே இருக்கும் சிலிக்கான் சத்து தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். பச்சை மிளகாயில் உள்ள பொட்டாசியம், இரும்பு மற்றும் மக்னீசியம் சீரான இதயத்துடிப்பிற்கும், ரத்த அழுத்தத்திற்கும் மிகவும் அவசியமானது.