படிக்கட்டுகளில் தவறி விழுந்தவர் மரணம்!

1598422146 9122 1
1598422146 9122 1

தலவாக்கலை, ஹொலிரூட்  பகுதியில் ஆண் ஒருவர் படிகட்டில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று மாலை இடம் பெற்றுள்ளது. 

சம்பவத்தில் உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான இராமையா இந்திரக்குமார் வயது (52) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இவரது மனைவி சில வருடங்களுக்கு முன் உயிரிழந்ததாகவும் குறித்த வீட்டில் இவர் மாத்திரம் வசித்து வந்ததாகவும் இவரின் ஒரே ஒரு மகன் கொழும்பில் வேலை செய்து வருவதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.