குறுந்தூர ஓட்ட வீரரான இமாஷ ஏஷான் மீது ஊக்கமருந்து குற்றச்சாட்டு!

Himasha
Himasha

இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரரான இமாஷ ஏஷான் மீது  தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்ட குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனால் அவருக்கு மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்பதற்கான தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து தடுப்பு நிலைய (ஸ்லாடா) பணிப்பாளர் ‍வைத்தியர் சீவலி ஜயவிக்ரம ‍அறிவித்துள்ளார்.

இதன்படி,  விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக இலங்கை தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து தடுப்பு நிலையத்துக்கு (ஸ்லாடா)  இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் பிரதிநிதியொருவருடன்  எதிர்வரும் 15 ஆம் திகதியன்று காலை 10.30 மணிக்கு வருகை தரும்படி இமாஷ ஏஷானுக்கு எழுத்து மூலமான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்லாடா பணிப்பாளர் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், கடைசியாக கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற இலங்கை இராணுவ மெய்வல்லநர் போட்டியில் பங்கேற்ற இமாஷ ஏஷான் இத்தாலிக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆண்களுக்கான 100 மீற்றர் தேசிய சாதனைக்கு சொந்தக்காரராக இருந்த இமாஷ ஏஷான், கடந்த 2016 சாப் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.