சத்தான சிறுகீரை சூப் செய்யும்முறை!

202002130958477155 Tamil News sirukeerai soup SECVPF
202002130958477155 Tamil News sirukeerai soup SECVPF

தேவையான பொருட்கள்:
சிறுகீரை – அரை கட்டு

பருப்பு தண்ணீர் – 1 கப்
மிளகு, மஞ்சள் தூள் – தலா ஒரு சிட்டிகை
இந்துப்பு – ஒரு சிட்டிகை
சீரகம் – அரை டீஸ்பூன்

செய்முறை:
சிறுகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பொடியாக நறுக்கிய சிறுகீரையை, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நன்கு வெந்ததும் அதில் பருப்பு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கீழே இறக்கி வைப்பதற்கு முன் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்து இறக்கி விடலாம். சத்தான ஆரோக்கியம் நிறைந்த சிறுகீரை சூப் தயார்.