சீரக தண்ணீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்!

1512204064 1063
1512204064 1063

தினந்தோறும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது ஜீரகம் கலந்த தண்ணீரை பருகி வந்தால் தோலின் பளபளப்பு தன்மையை கூட்டி, இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது. தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

சீரகத்தில் விற்றமின் ஏ மாற்று விற்றமின் சி சத்து அதிகம் உள்ளன. இந்த இரண்டு சத்துகளும் உடலின் வெளிப்புறதிலிருந்து வரும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றை தடுக்கிறது. சீரக தண்ணீர் இரும்பு சத்து அதிகம் கொண்டிருப்பதால் உடலுக்கு கூடுதல் பலத்தையும் தருகிறது. சீரக தண்ணீரை தினமும் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செல்கள் புத்துணர்ச்சியடைகின்றன. இதனால் உடலில் நல்ல சுறுசுறுப்பு தன்மை ஏற்படுகிறது. சிலருக்கு எதையும் சீக்கிரத்தில் மறந்து விடும் நிலை இருக்கும் அப்படிப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒருமுறையேனும் ஜீரக தண்ணீரை பருகி வந்தால் ஞானசக்தி அதிகரிக்கும்.

உடலில் ஓடும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ரத்த சோகை நோய் உண்டாகிறது. இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு ஜீரக தண்ணீரை குடித்து வந்தால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இழந்த உடல் சக்தியையும் மீட்டு தரும்.