அத்திப்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

625.0.560.350.160.300.053.800.668.160.90 1 8
625.0.560.350.160.300.053.800.668.160.90 1 8

அத்தி பழத்தில் மெக்னீசியம், ஜிங்க், மாங்கனீசு போன்ற தாதுக்கள் உள்ளன. மூச்சுத்திணறல் உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் எடுத்து வந்தால் மூச்சு குழாயில் உள்ள அசுத்தங்களை சுத்தம் செய்கிறது.

தினமும் மூன்று பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும். அத்தி பழத்தின் இலைகளை எடுத்து பொடியாக்கி தினமும் வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் குணமாகும்.

தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர்ப்பை புண் மற்றும் சிறுநீரில் கல் போன்ற சிறுநீரக சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. அத்திப்பழம் சோர்வு, இளைப்பு, வலிப்பு நோய், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. மலச்சிக்கலை குணப்படுத்த இந்த பழம் அதிகம் உதவுகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 3 பழங்களை எடுத்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குண்டாவீர்கள்.

உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. கல்லிரல் வீக்கத்தை குணப்படுத்துகிறது. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் காலையில் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் அகலும். சருமத்தை பாதுகாத்து மற்றும் சரும சுருக்கங்களை சரிசெய்து இளமையாக இருக்க இந்த பழம் உதவுகிறது. முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் அத்திப்பழத்தை எடுத்து வந்தால் முடி உதிர்வு குறைந்து நன்கு முடி வளரும்.