சுரைக்காய் ஜூஸ் குடிப்பதன் நன்மைகள்

6666 1
6666 1

சுரைக்காய், உங்கள் உணவுமுறையில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமளிக்கும் காய்கறிகளில் ஒன்று ஆகும்.

சுரைக்காயில் சுண்ணாம்புச்சத்து, பொஸ்பரஸ், இரும்புச் சத்து, விட்டமின் பி போன்றவை உள்ளன.

இது பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதிலும் சுரைக்காயில் ஜூஸ் போட்டு குடிப்பதனால் இன்னும் உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்குகின்றது.

அந்தவகையில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

01.சுரைக்காய் சாறு உடல் ஏற்படும் வலி மற்றும் அழற்சியை தணிக்கும். இன்சோம்னியா மற்றும் வலிப்பு நோய்க்கு சுரைக்காய் பழச்சாறு சிறந்த மருந்தாக உள்ளது. சுரைக்காய் சாறு இதய ரத்த நாள நோய் சிகிச்சைக்கும் பயன்படுகிறது.

02.சுரைக்காய் சாறு குடித்து வந்தால் நமது இதய ஆரோக்கியம் மேம்படும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

03.செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்து கொள்ளும் போது கூட இது பலன் அளிக்கும்.

04.சுரைக்காய் சாறு சக்தி வாய்ந்த போசணையாக ஆக உதவும். இந்த சாறு இதய ரத்த நாள நோய் அபாயம் உள்ளவர்களுக்கு சிறந்த தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

05.இந்த சுரைக்காய் சாறு தொடர்ந்து சிறிதளவு குடிப்பதால் இருதய தொடர்பான நோய்கள் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தம் குறைக்க கொடுக்கப்படும் சிகிச்சைகளில் பயன்படுத்தலாம்.

06.சுரைக்காய் ஜூஸ் சருமப் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்தாக பயன்படுகின்றது. இதில் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கவும் எதிர்த்துப் போராடவும் இந்த சுரைக்காய் உதவியாக இருக்கும்.

07.சுரைக்காயில் 80 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் மட்டுமே இருப்பதால் அஜீரணம், மெட்டபாலிசம் போன்றவற்றைத் துரிதப்படுத்தலாம்.