கற்பூரவல்லி இலையின் மருத்துவ பயன்கள்!

karpooravalli
karpooravalli

கற்பூரவல்லி ஆசிய, ஆப்பிரிக்க, போன்ற கண்டங்களில் பரவலாக காணப்படும் மிக முக்கிய மருத்துவத்தாவரமாக கருத்தப்படுகிறது.

கற்பூரவல்லியின் இலைகளே மருத்துவத்தில் பயன்படுபவை. கற்பூரவல்லி இலையைக் கையால் தொட்டுத் தடவி, முகர்ந்தால் ஓமத்தின் மணம் தரும். கற்பூரவல்லி தண்டுகள் மெல்லியதாகவும், வளைந்தும், ஒடியும் தன்மையுடனும் இருக்கும். நீலநிறமான பூங்கொத்துகள் வாசனையுடன் காணப்படும்.

வயிறு சம்பந்தப்பட்ட நோய்க்கும் இளைப்பு நோய்க்கும் உள்மருந்தாக இது பயன்படுது. கண் அழற்சி ஏற்படும்போது இந்தக் கற்பூரவல்லி இலைசாறை மேல் பூச்சா தடவினால் குணம் தரும்.

ஒரு பாத்திரத்தில் நீர் எடுக்கவும். இதனுடன், கற்பூரவல்லியின் இலைகளை நீக்கிவிட்டு தண்டுகளை மட்டும் எடுத்து சிறுசிறு துண்டுகளாக்கி நசுக்கி போட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்க்கவும். இந்த தேனீரை தினமும் உணவுக்கு முன்பு எடுத்துவர தலைநீரேற்றம், தலைவலி சரியாகும்.

கற்பூரவல்லி காசநோய், கபக்கட்டு, அம்மைக் கொப்புளம் ஆகியவைகளைக் கட்டுப்படுத்தும். குழந்தை மருத்துவத்திலும் கற்பூரவல்லி உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. மழைக்காலத்தில் ஏற்படும் தலைநீரேற்றத்தை போக்க, கற்பூரவல்லி இலையை சாப்பிடலாம்.

குழந்தைகளின் மார்பில் கட்டிய சளி கரைய பசுமையான கற்பூரவல்லி இலைகளைத் தேவையான அளவு சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, இளஞ்சூடாக வதக்கி, சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாற்றுடன், அதே அளவு தேன் கலந்து குடிக்கக் கொடுக்க வேண்டும்.