தொண்டை வலி, இருமல் தொல்லைக்கு தீர்வு தரும் எளிய பாட்டி வைத்தியம்

images 8
images 8

வெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகள் அவதிப்படுவதுண்டு.

ஆகையால் தொண்டை வலி, இருமல் தொல்லைக்கு தீர்வு தரும் எளிய பாட்டி வைத்தியங்களை சிலவற்றை பார்ப்போம்.

  • தொண்டை வலிகுணமாக பால் இல்லாத ரீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.
  • சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
  • இருமல் சளிக்கு, தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
  • இருமல் தொல்லைக்கு தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.
  • அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
  • தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.