பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

mushroom curry punjabi06
mushroom curry punjabi06

காளான் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவுப் பொருளாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காளானை விரும்பி சாப்பிடுகின்றனர்.

காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.

காளான்களில் நல்ல காளான், கெட்ட காளான் என இரு வகை காளான்கள் இருக்கின்றன.

காளான்களில் பல்வேறு வகைகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு சில மட்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது ஆகும். பல காளான்கள் நச்சு தன்மை கொண்டவையாக உள்ளன.

உணவில் போதுமான அளவு வைட்டமின் மற்றும் தாதுகளை பெறப் பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுவதோடு காளான்களையும் சேர்த்துக்கொள்வது நாம் நினைத்துப் பார்க்காத அளவு நன்மைகளைத் தரவல்லது

அந்தவகையில் தற்போது காளான் சாப்பிடுவதால் ஏற்படும் பல வகையான நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

காளான் உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது.

இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான்.

காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத் தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.