கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவதற்கான காரணம் இதுதான்

625.500.560.350.160.300.053.800.900.160.90 11
625.500.560.350.160.300.053.800.900.160.90 11

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சினைகளுள் ஒன்று தான் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்.

பொதுவாக இந்த மாதிரியான நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணம், ஒன்று உணவு முறையும் உட்கொள்ளும் மருந்துகள் தான்.

அதுமட்டுமின்றி, வேறு சில காரணங்களாலும், கருமையான மலம் வெளியேறும் எனவும் இதனை தெரிந்து கொண்டால் ஆரம்பத்திலே இது போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும்.

அந்தவகையில் தற்போது கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவதற்கான வேறு சில காரணங்களைப் பார்ப்போம்.

  • குடலியக்கம் சரியாக செயல்படாமல், செரிமானப் பிரச்சனை ஏற்பட்டாலும், கருப்பு நிற மலமானது வெளியேறும்.
  • சிலர் காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதனால் வயிற்று உப்புசம் ஏற்பட்டு, கருமையான மலம் வெளியேறும் நிலை ஏற்படும்.
  • உட்கொள்ளும் மருந்துகளில் நல்ல அளவில் லெட் மற்றும் இரும்புச்சத்து நிறைந்திருந்தாலும், கருப்பு நிற மலத்திற்கு வழிவகுக்கும்.
  • சில உணவுப் பொருட்களான ப்ளூபெர்ரி, பீட்ரூட் மற்றும் தக்காளி போன்றவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும், சிவப்பு கலந்த கருப்பு நிறத்தில் மலம் வெளியேறும்.
  • குடல் புற்றுநோய் இருந்தாலும், கருப்பு நிற மலம் வெளிவரும்.
  • உடலில் இரத்த உறைவு ஏற்பட்டிருந்தாலும், கருமை நிறத்தில் மலம் வெளியேறும். அதிலும் இந்த பிரச்சனை குடலில் நீண்ட நாட்களாக முற்றிய நிலையில் இருந்தால், அது பெரும் ஆபத்தை உண்டாக்கிவிடும்.
  • அல்சர் இருக்கும் போது, செரிமான பாதையில் புண்கள் இருப்பதால், செரிமான மண்டலத்தில் செரிமானமடைந்து செரிமான பாதை வழியாக வெளியேறும் கழிவுகளில் இரத்தம் சேர்ந்து, கருப்பு நிற மலத்தை உருவாக்கிவிடும்.