உயர்தரம், புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்டபடி அதே தினத்தில் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதவேளை உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவியமை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்காக பரீட்சையை ஒத்திவைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2020 உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பான முடிவை இன்று அல்லது நாளை அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவியமை காரணமாக ஒக்டோபர் 11 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது தொடர்பாக இறுதி முடிவு மற்றும் பரீட்சைகளுக்கான புதிய திகதி குறித்து இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் முடிவு செய்யப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையும் அதே நேரத்தில் க.பொ.த. உயர்தர பரீட்சை ஒக்டோபர் 12ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.