போட்டியில் தவறி கீழே விழுந்த நிஷா- பிக்பாஸ் சீசன் 4

ssssssssss
ssssssssss

நேற்று மாலை 16 போட்டியாளர்கள் கொண்டு மிகவும் கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 4. இதில் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி, சனம் ஷெட்டி உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டனர்.

இன்று இரவு 9.30 மணிக்கு பிக்பாஸ் சீசன் 4ன் முதல் எபிசொட் ஒளிபரப்பாக இருக்கிறது. இன்று ஒளிபரப்பாகும் முதல் பகுதி காலை வெளியாகியிருந்தது. இதில் வாத்தி கம்மிங் பாடலுக்கு அனைவரும் நடனமாடினார்.

இதனை தொடர்ந்து இரண்டாம் விளம்பரத்தில் நாமினேஷன் துவங்கியது. இதில் ஷிவானியை சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவத்தி ஆகியோர் இலக்குவைப்பது போல் இருந்தது.

இந்நிலையில் மூன்றாவது விளம்பர காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஒரு போட்டியில் ஓடிக்கொண்டிருக்கும் போது தீடீரென கீழே தடுக்கி விழுந்திருக்கிறார்.