யாழ்ப்பாணத்தில் சுகாதார நடைமுறைகள் கடுமையாக்கப்படும் -கேதீஸ்வரன்

vlcsnap 2020 10 05 16h32m12s474
vlcsnap 2020 10 05 16h32m12s474

யாழ்.குடாநாட்டில் இன்று மாலையிலிருந்து சுகாதார நடைமுறைகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பொதுமக்கள் அநாவசியமாக வீதிகளில் நடமாடாது பாதுகாப்பாக தங்கள் வீடுகளில் இருக்குமாறும் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இன்றையதினம் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.