முலாம்பழத்தின் மருத்துவக் குணங்கள்: கோடையில் சாப்பிட வேண்டிய பழம்

18 1
18 1

முலாம்பழம் கோடை காலத்தில் மிக எளிதாக கிடைக்கக்கூடியது. இது அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ள ஒரு நீர்ப்பழம் ஆகும்.

இதில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. மினரல் அதிகம் இருக்கிறது.

நோய்களை தடுக்க கூடியது மட்டுமின்றி உடலுக்கு புத்துணர்வை அளிக்கவல்லது. கோடைக் காலத்தில் முலாம் பழம் அதிகளவில் கிடைக்கும்.

இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகை மெருகூட்டுவதிலும் இது பெரிதும் பயன் அளிக்கின்றது.

அந்தவகையில் முலாம்பழத்தை எப்படி சருமத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் 1 தே.க கடலை மாவுடன் 2 தே.க முலாம் பழ கூழ், அரை தே.க எலுமிச்சை சாறு கலந்து பசை போல் ஆக்கி முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். அதன் பிறகு கற்றாழை ஜெல் தடவலாம்.

வறண்ட சருமம் கொண்டவர்கள் 1 தே.க பால் பவுடருடன், 2 டீஸ்பூன் முலாம் பழ கூழை சேர்த்து குழைத்து சருமத்தில் தடவ வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு ஏதாவதொரு மாஸ்சரைசரை லேசாக தடவிக்கொள்ளலாம்.

1 டீஸ்பூன் ஓட்ஸ் கூழுடன் 2 தே.க முலாம் பழ கூழை கலந்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து சருமத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு சாதாரண நீரில் கழுவ வேண்டும்.

முலாம் பழ கூழையும், ரோஸ் வாட்டரையும் சம அளவு கலந்து ஈரமான கூந்தலில் தடவ வேண்டும். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கூந்தலை அலசி விட வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் கூந்தல் பளிச்சென்று ஜொலிக்கும்.