அப்பிள் பழம் உண்ணும் போது கவனிக்க வேண்டியவை!

150
150

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை விலக்கி வைக்கலாம் என்பது முற்றிலும் உண்மை. இதில் பல விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிரம்பி இருக்கின்றது. அத்தகைய சத்துக்கள் உடலை வலுப்படுத்த உதவும்.

எந்த நோயும் உடலைத் தாக்காத வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். அது மட்டுமின்றி உங்கள் சருமத்தை சிவப்பாக ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் உதவுகிறது. மற்றும் பசி இன்மையை போக்கக் கூடியது . அப்பிளில் ஆண்டி ஆஸ்டிடண்ட், விட்டமின் சி , பொட்டாசியம், பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

அப்பிள் தோலில் அதிக அளவில் நார்சத்துகள் உள்ளது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், செரிமான கோளாறு ஆகியவை நீங்கும். அத்துடன் கொலஸ்ட்ரோலின் அளவு குறைந்து, கச்சிதமான எடையுடன் இருப்பீர்கள். மேலும், தசைகளின் வளர்ச்சியும் அதிகரித்து, சிறப்பான உடல் அமைப்பை பெறுவீர்கள்.

அப்பிள் உண்ணும் போது கவனிக்க வேண்டியவை

நம் நாட்டில் அப்பிள் விளைவதில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிலி, நியூசீலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ரெட் டெலீசியஸ், ராயல் ஹாலா, கிராணி ஸ்மூத் ஆகிய ஆப்பிள் வகைகளை இறக்குமதி செய்கிறார்கள்.

அவை நம் நாட்டை வந்தடைய சுமார் 3 மாதங்களாவது பிடிக்கும். அவற்றின் நிறம், சுவை கெடாமல் இருக்கவும் பூச்சிகள் நுழைந்துவிடாமல் தடுக்கவும், நீர்ச்சத்து வெளியேறாமல் இருக்கவும், பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும் பொருட்டும் அதன் மேல் மெழுகு தடவி இறக்குமதி செய்கிறார்கள்.

நீங்கள் வாங்கிய அப்பிளை கத்தியை வைத்துச் சுரண்டி அதில் மெழுகுத் துகள் வெளியேறினால் அது மெழுகு பூசப்பட்ட பழமாகும். நீங்கள் அப்பிளை எப்படிக் கழுவினாலும் அதிலுள்ள மெழுகு போகாது.

பெரும்பாலும் குழந்தைகள் அப்பிளை அப்படியே கடித்துச் சாப்பிடுவார்கள். இது அவர்களுக்கு ஆபத்தாக முடியும். மெழுகு பூசிய அப்பிளைச் சாப்பிடும் பொழுது அந்த மெழுகு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் படிந்துவிடும். இதனால் குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு, வாயுத்தொந்தரவு, புற்றுநோய் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளாகும் வாய்ப்புக்கள் அதிகம்.

வாங்கிய அப்பிளை சூடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்து தோலில் மேல் இருக்கும் மெழுகை நீக்கிவிட்டு சாப்பிடலாம். இல்லையென்றால் தோலை நீக்கிவிட்டு சாப்பிடலாம்.