உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீரகம்!

download 16
download 16

நமது அன்றாட சமையலில் சேர்க்கப்படும் ஒரு அத்தியாவசிய பொருள் தான் சீரகம்.

இது ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

அநதவகையில் சீரகத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால் சீரகம் ஒரு நல்ல மருந்து. ஏனென்றால் இது குடலில் ஜீரணிக்காத நச்சுக்களை நீக்குகிறது. இது செரிமான பிரச்சனைகளையும் தவிர்க்கும்.

இரவில் இரண்டு தேக்கரண்டி சீரகத்தை ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலக்கவும். வெறும் வயிற்றில் அந்த நீரைக் குடிக்க செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதோடு உடலில் உள்ள நச்சுகளும் நீங்கும்.

சீரகம் குடல் புற்றுநோய் வராமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.

இரத்ததில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறத

உடலின் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. கொழுப்பு கரைவதால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும். இதனால் உடல் எடை குறையும் அதிசயத்தையும் காணலாம்.

முக்கிய குறிப்பு
அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை உண்டாக்குமாம்.

முந்தைய காலத்தில் கருவை கலைக்க சீரகத்தையும் அதிகமாக சாப்பிடுவார்களாம். எனவே கரு நிற்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் சீரகத்தை அளவாக சாப்பிட வேண்டும்.