மழைக்கால சரும பராமரிப்பு : அருமையான குறிப்புகள்

unnamed 29
unnamed 29

பொதுவாக மழை அதிகரிக்கும் காலங்களில் ஈரப்பதம் மற்றும் நீர் தேங்குவதன் காரணமாக பல்வேறு சரும தொற்றுகளுக்கு ஆளாகக்கூடும்.

கைகள், முதுகின் மேல் பகுதி, உச்சந்தலை, தொடைப்பகுதிகளில் வலி மற்றும் வீக்கம், சிறு கொப்பளங்கள் ஏற்படலாம்.

அதிலும் குறிப்பாக அதிகம் முகத்தையே பாதிக்கும். முகப்பரு, வறண்ட சருமம் உள்ளவர்கள் மழைக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால் பாதிப்பு அதிகமாகும்.

அந்தவகையில் மழைக்காலங்களில் எப்படி முகத்தை பராமரிக்கலாம் என பார்ப்போம்.

முகத்தை சுத்தமான நீரில் அடிக்கடி கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறையாவது சுத்தம் செய்யுங்கள். குறிப்பாக இரவு நேரங்களில் முக சுத்தம் அவசியம். இரவு நேரங்களில் பகல் நேர மேக் அப் நிச்சயம் கலைக்க வேண்டும்.

பன்னீர் ரோஜாக்களை கொண்டு தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர் மிகச்சிறந்தது. இது எண்ணெய் சருமத்துக்கு பயன்படுத்தலாம். இதனுடன் வெள்ளரி சாறையும் கலந்து பயன்படுத்தலாம்.

வாரம் இரண்டு முறை முட்டையின் வெள்ளைகருவுடன் ஓட்ஸ் கலந்து கரும்புள்ளிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். 30 நிமிடங்கள் கழிந்ததும் முகத்தை கழுவி உலர வைக்கவும். வாரம் இரண்டு முறை செய்தால் கரும்புள்ளிகள் ஏதேனும் இருந்தால் மறையக்கூடும். கரும்புள்ளிகள் வராமலும் தவிர்க்க முடியும்.

பருக்கள் கொண்டிருந்தால் க்ளென்சர் மூலம் முகத்தை துடைக்க வேண்டும். உங்கள் சருமத்துக்கேற்ற லோஷனுடன் ரோஸ் வாட்டரை கலந்து அதை பஞ்சு உருண்டையில் நனைத்து முகத்தில் அவ்வபோது தடவி வந்தால் பருக்கள் குறையும்.

மழைக்காலத்தில் அதிக எண்ணெய் சருமத்தால் பாதிக்கப்படுபவர்கள் முல்தானி மிட்டியுடன் ரோஸ் வாட்டர் கலந்து குழைத்து முகத்துக்கு பேக் போடவும். இது நன்றாக உலர்ந்ததும் கழுவி விடவும். வாரம் ஒரு முறையாவது தவிர்க்காமல் இந்த பேக் பயன்படுத்துவதன் மூலம் மேலும் அதிகரிக்காமல் பார்த்துகொள்ளலாம்.