முடி வளர கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

maxresdefault 2
maxresdefault 2

பல உணவுகளில் கறிவேப்பிலை பயன்படுத்தப்படுவதை நாம் நன்கு அறிவோம். பெரும்பாலும் அவை குழம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை “இனிப்பான வேப்பிலை” என்றும் கூட அழைக்கலாம்.

கறிவேப்பிலையை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம்.

முடி உதிர்தல் பிரச்சினை என்பது சமாளிக்க முடியாத கடினமான பிரச்சினையாக உள்ளது. இதற்கான தீர்வுகள் என செயற்கை பொருட்களை பலரும் பரிந்துரைத்து கேட்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் சமையல் அறையிலேயே சில பொதுவான இயற்கை வைத்தியங்கள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

ரசாயன சிகிச்சைகள், வெப்பமாக்கும் கருவிகள், மாசு போன்ற பல காரணங்களால் உங்கள் முடியின் வேர்கள் பாதிப்படையும். இதனால் முடியின் வளர்ச்சி நின்று கூட போகலாம். பாதிப்படைந்துள்ள வேர்களை சீர் செய்யும் திறனை கொண்டுள்ளது கறிவேப்பிலை.

கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால், முடி வளர்ச்சியும் அதிமாகும். கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் கூட வளமையாக உள்ளது. அதனால் அது தலைச்சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும். இறந்து போன தலைச்சரும மயிர்த்தண்டை நீக்கவும், பொடுகை தடுக்கவும் இது உதவும்.

நன்கு முடி வளர கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

தினமும் கறிவேப்பிலையை சாப்பிட்டால்

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

கறிவேப்பிலை தேநீர்

கறிவேப்பிலை விழுதை நேரடியாக தலைச்சருமத்தில் தடவிக் கொண்டால், வேர்களை அது சீர்செய்யும். மேலும் முடித்தண்டுகளின் வலுவை மீண்டும் பெறச் செய்யும். முடிந்தால் கறிவேப்பிலை விழுதை அப்படியே உண்ணலாம். கேசத்தின் வேர்களை கறிவேப்பிலை வலுவடையச் செய்வதால், முடியின் வளர்ச்சியும் வேகம் பிடிக்கும்.

செரிமான பிரச்சினையை சரிசெய்ய

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சினையை தீர்ப்பதோடு, செரிமான பிரச்சினைகள் நீங்கிவிடும். மேலும் முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளி தொல்லை நீங்க

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.