பூண்டுப் பாலில் உள்ள மருத்துவ குணங்கள்

2 34
2 34

பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம் என்று கிராமப்புறங்களில் சொல்வர். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தையின் உணவில் பூண்டினை சேர்த்து கொள்வதன் பயன் பற்றி சொல்லுவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.

பூண்டில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் இதை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்வது அவசியம். இதனை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை நீங்கும்..பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் உணவின் சுவையை மேம்படுத்தும் மற்றும் ஊட்டச்சத்தை பல மடங்கு அதிகரிக்கும். .

மருத்துவ குணங்கள் நிரம்பிய உணவுப் பொருட்களை நம்முடைய அன்றாட சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் குணநலன்களை எல்லாம் தேடிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

பூண்டுப் பாலில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றி பார்ப்போம்

இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனைக் காணலாம்.

பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கும்.

ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.

மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், விரைவில் நுரையீரல் அழற்சியை குணமாக்கலாம்.