தொண்டமாந்துறை சுமைதாங்கிக் கற்கள்

6144 n
6144 n

அரும்பாவூர்_பெரம்பலூர் முதன்மைச்சாலையிலிருந்து தொண்டமாந்துறைக்குச் செல்லும் பிரிவுச் சாலையில் அமைந்துள்ள வளைவில் நிற்கும் சுமைதாங்கிக் கல்லைக் கடந்த போதுதான் கவனித்தேன்.

அதில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.ஆர்வம் மேலிட வண்டியை விட்டு இறங்கினேன்.

அண்மையில் பூசை நடந்ததற்கு அடையாளமாக ஊதுபத்திக்குச்சிகள், காலி பாக்கெட்டுகள், சூடம் எரிந்த தடம்,வெளிறிச் சருகான வாழை ,இலைத்துண்டு ,சில மஞ்சள் சாமந்திப் பூக்கள்.

சுமைதாங்கிக் கல்லுக்குப் பூசை செய்ததை முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறேன்.

சற்றொப்ப 47 ஆண்டுகளுக்கு முன்னால் பிரசவத்தின் போது மரித்துப் போன இளம்தாயின் நினைவுகளைச் சுமந்து,
அந்தத் தாயைத் தெய்வமாக எண்ணி,

வழிபட்டு வரும்
அந்த குடும்பத்தின் வாரிசுகளை வணங்குகிறேன்.

இனி அந்த சுமைதாங்கிக் கல்லில் காணப்படும் வாசகங்கள்

#மேற்பகுதிக்கல்:
1973 தொண்டமாந்துறை

#பக்கவாட்டுக்கல்:
“7.6.1973 -ம் வருஸம் ஆனி மாதம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு
தொண்டமாந்துறை ம.பெரியண்ணன் மனைவி செல்லம் உபயம்”

Mahathma Selvapandiyan