நவகிரகங்களை இப்படி சுற்றினால் இவ்வளவு பலன்களா !

1024px Navagraham
1024px Navagraham

இந்து சாஸ்திரப்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது போன்றவை நவகிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு கிரகமும், ஒவ்வொரு பலனைத் தருகிறது.

புகழுக்கு சந்திரனும், ஆரோக்யத்துக்கு சூரியனும், மன வலிமைக்கு செவ்வாயும், புத்தி கூர்மை பெற புதனும், குறையில்லா செல்வம் பெற குரு பகவானும், இல்வாழ்க்கை, மனை யோகம் பெற சுக்கிரனும், ஆயுள் பலம் அதிகரிக்க சனி பகவானும், வெற்றிக்கு ராகு பகவானும், ஆன்மிக ஞானம் பெற, கேது பகவானும் அருள் புரிகின்றனர்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி போன்ற ஏழு கிரகங்களும் வலமிருந்து இடமாக சுற்றுவதால் வலதுபுறமாக சுற்றவேண்டும்.

ராகு, கேது கிரகங்கள் இடமிருந்து வலது புறமாக சுற்றுவதால், இடமிருந்து வலமாக சுற்றவேண்டும்.ஆனால் இப்படி சுற்றுவது தவறானது.

நவகிரகங்களைச் சுற்றும்போது வலதுப்புறம், இடதுப்புறம் என்று பிரித்து சுற்ற வேண்டியதில்லை.

நவகிரகங்களை முதலில், 9 முறை சுற்றி வந்த பிறகு விரும்பும் பலனை பெற, அந்த கிரகத்திற்குரிய எண்ணிக்கையில், மீண்டும் வலம் வந்து வணங்கினால் நல்லது.