உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா? இதனை தடவுங்கள்

images 1 2
images 1 2

தயிர் நாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் ஒன்றாகும்.

தயிர் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி நமது சரும ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரிக்க உதவி புரிகின்றது. இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.

இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்னைகள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்.

சருமத்தில் அதிகளவு பருக்கள் ஏற்பட்டால் தயிரில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து, சருமத்தில் ஏற்பட்டுள்ள பருக்கள் மீது தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

ஒரு துண்டு வெள்ளரிக்காய், இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் ஓட்ஸ் அல்லது கடலை மாவு ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து ஒரு முறை அரைத்து பின் சருமத்தில் தடவி சுமார் 20 நிமிடம் வரை வைத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவவும்.