பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கான பயனுள்ள தகவல்கள்

website backfill blog 59396 1480762647888
website backfill blog 59396 1480762647888

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது உடல் நலனை கவனிப்பதைப் போல பிரசவத்திற்குப் பின்னர் தங்களது உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.

பிரசவத்திற்கு பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு போதுமானவரை ஓய்வு எடுத்துக் கொண்டால் தான் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும்.

பிரசவத்திற்குப்பின் எடை போடுவது, அதிலும் வயிற்றில் சதை போடுவது,தொப்பை போடுவது வழக்கமாகும்.

இதற்காக கண்ட கண்ட மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி எடுப்பது முற்றிலும் தவறாகும்.

அந்தவகையில் தற்போது பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தொப்பையை எப்படி குறைக்கலாம் என இங்கு பார்ப்போம்.

ஒரு நீளமான துணியை எடுத்து உங்கள் வயிற்றுப் பகுதியில் நன்கு கட்டிக் கொள்ளுங்கள்.அதை வாங்கி பயன்படுத்தலாம்.இது போல நீங்கள் 4 முதல் 6 வாரங்கள் தொடர்ந்து செய்தால்,உங்கள் தொப்பைக் குறையத் தொடங்கும்.

இதமான சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை பழச் சாற்றைப் பிழிய விட்டு,அத்தோடு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு தேனையும் சேர்த்து கலந்து இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உங்கள் தொப்பை சில நாட்களிலேயே குறையும்.

தாய்மார்கள் தினம் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து வர,அவர்களின் எடை மேலாண்மை அடையும்.ஏனெனில் தாய்ப்பால் கொடுப்பதால் உடலிலிருந்து தினம் 500 கலோரிகள் ஏறிக்கப்படுகின்றது.

வயிற்றுச் சதைகளைக் குறைக்கும் யோகாசனங்கள் மற்றும் உடற்பயிற்சி முறைகளை ஒரு நல்ல பயிற்சியாளரின் ஆலோசனைப்படி செய்யும் போது எதிர்பார்த்த நற்பலன்களை விரைவில் பெற முடியும்.

முடிந்த வரை அவ்வப்போது நன்கு தூங்க வேண்டும். இதனால் உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்க வேண்டும். ஏனென்றால் சரியான தூக்கம் கிடைக்காத பட்சத்திலும் உடல் எடை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

நடைப் பயிற்சி செய்வது நல்லது. ஏனெனில் நடக்கும் போது உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும்.உடல் எடை குறைவதோடு, உங்கள் மனமும் புத்துணர்ச்சி பெறும்.இந்த வழியில் நீங்கள் உங்கள் தொப்பையைக் குறைக்க முயற்சி செய்யலாம்.