கலப்பட பொருட்களை கண்டறியும் புதிய தொலைபேசி அறிமுகம்!

91
91

ஸ்மார்ட் கைப்பேசிகளில் உள்ளடக்கப்படாத அம்சங்கள் என்று எதுவுமே இல்லை என்ற அளவிற்கு பல வசதிகளை அவை கொண்டுள்ளன.

இப்படியிருக்கையில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் கமெராக்களில் புதிய தொழில்நுட்பம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.

இதன்படி குறித்த கைப்பேசிகளின் கமெராக்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களைக் கொண்டு பொருட்களின் போலித்தன்மை தொடர்பில் அறிந்துகொள்ள முடியும்.

உதாரணமாக பலசரக்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசியானது போலியானதா அல்லது அசலானதா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலுள்ள டீப் லேர்னிங் உத்தி இதற்காக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.