முசலி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

MUSALI
MUSALI

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிர்வாகத்தின் கீழான முசலிப் பிரதேசபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த வரவு செலவு திட்டத்தை இன்று (திங்கட்கிழமை) முசலிப்பிரதேசபையின் தவிசாளர் ஹலீபத்து சுபியான் சமர்பித்துள்ளார்.

இதன்போது குறித்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், 5 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒரு உறுப்பினரும், சுதந்திரக் கட்சியை சேர்ந்த 1 உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை சேர்ந்த 1 உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் 2 உறுப்பினர் என ஐவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

மேலும் எதிர்க்கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் இருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவரும், வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது