செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் மனநோய் ஏற்படுமா!

letter to mars
letter to mars

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் டிமென்சியா என்ற மனநோய் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகளை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் படிப்படியாக சுயநினைவை இழந்து டிமென்சியா எனும் நாட்பட்ட மனநோய் ஏற்படலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முற்பட்டால் முதல் பிரச்சினையாக இருப்பது சுகாதார குறைபாடுகள் தான்.

அவற்றில் மிக முக்கியமானது என்னவென்றால், உலோகம், பிளாஸ்ரிக் மற்றும் மனிதத்தோல் வழியாக பயணிக்கும் திறன் கொண்ட அதிக அளவு கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்துவதுடன் கடுமையான அறிவாற்றல் குறைபாடுகளையும் ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கு கதிர்வீச்சின் மூலம் சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த டிமென்சியா நோய் பாதிப்பு இருப்பதாக அமெரிக்க வைத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.