முகப்புத்தகம் என்கிற எமன் !எச்சரிக்கையாக இருங்கள்

201711301129460904 Facebook Could Soon Ask You to Upload a Photo to Confirm SECVPF
201711301129460904 Facebook Could Soon Ask You to Upload a Photo to Confirm SECVPF

சுமார் 245 கோடிப்பேர் உலாவுகின்ற ஓர் இடம் முகப்புத்தகம் . அதே நேரம் 300 கோடிக்கும் அதிகமான போலி பயனாளர்கள் சுற்றித்திரிகிற ஓர் இடமும் முகப்புத்தகம் தான். அதனால் உடனடியாக கீழ்வரும் விஷயங்களை முகப்புத்தகத்தில் இருந்து நீக்குங்கள் என்று டெக் வல்லுநர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

உறவு நிலை

முகப்புத்தகம் மாதிரியான சமூக வலைத்தளத்தில் உங்களின் உறவு ரகசியங்களை வெளிப்படையாக தெரிவிப்பது அவ்வளவு அவசியமானது இல்லை. இதனால் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது.

குழந்தைகளின் புகைப்படங்கள்

உங்களின் குழந்தைகள் மற்றும் நண்பர்கள், உறவினர், தெரிந்தவர்களின் குழந்தைகள் என எந்தக் குழந்தையின் புகைப் படத்தையும் முகப்புத்தகத்தில் பகிர வேண்டாம். இது குழந்தைகளைக் கடத்துபவர்களுக்கு சாதகமாகிவிடும். அத்துடன் குழந்தை படிக்கும் பள்ளியைப் பற்றிய தகவல்களையும் தவிருங்கள்.

குடிக்கும் புகைப்படங்கள்

மது போத்தல்களுடனோ அல்லது ஏதாவது பார்ட்டியில் இருப்பது மாதிரியோ பலரும் புகைப்படங்களைப் பகிர்கின்றனர். ஜாலிக்காக இதைப் பகிர்ந்தாலும் இந்தப் புகைப்படங்கள் உங்கள் மீதான மரியாதையை சீர்குலைக்கும்.

தெரியாதவரை இணைக்க வேண்டாம்

நீங்கள் கொஞ்சம் பிரபலமாகும்போது நிறைய நண்பர் வேண்டுகோள் வரும். அதில் தெரியாத நபர்களையும் இணைத்துக்கொள்வோம். இதை முடிந்தளவு தவிர்க்க பாருங்கள்.

கார்டு தகவல்கள்

முகப்புத்தகத்தில் நிறைய விளம்பரங்கள் வரும். அவற்றில் பிடித்ததைக் அழுத்தி ஷாப்பிங் செய்வது பலரின் வழக்கம். அப்படி ஷாப்பிங் செய்யும்போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தகவல்கள் பதிவாக வாய்ப்பிருக்கிறது. அதனால் ஷாப்பிங் முடிந்தவுடன் கார்டுகளின் தகவல்களை உடனடியாக நீக்கிவிடுங்கள்.

தொலைபேசி இலக்கங்கள்

நீங்கள் தெருவில் நடந்து செல்கிறீர்கள். எதிரே வருவோர் போவோர் எல்லோரிடமும் உங்களின் தொலைபேசி இலக்கங்களத் தருவதைப் போன்றதுதான் முகப்புத்தகத்தில் நம்பரை பகிர்வது. இன்று தொலைபேசி இலக்கங்களத் வைத்தே உங்களின் அனைத்து தகவல்களையும் திருட முடியும். உஷாராக இருங்கள்.

டேக்கைத் தவிருங்கள்

நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களை டேக் செய்யலாம். டேக் செய்யப்பட்டிருக்கும் பதிவு முக்கியமாக இருந்தாலும் அதைப் பார்த்துவிட்டு டேக்கை நீக்கிவிடுங்கள். இல்லையென்றால் அந்த டேக் மூலம் அந்நியர் ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது.