கண் ஓரத்தில் பீழை ஏன் உருவாகிறது தெரியுமா! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆய்வாளர்கள்

10 1507616112 7
10 1507616112 7

கண்கள் தான் நம்மை இந்த உலகின் அழகை காண வழிவகுக்கிறது. அதுமட்டுமின்றி அழகான கண்கள் தான் முகத்திற்கு அழகும் கூட.

ஆனால் இந்த கண்களின் ஆரோக்கியமும், அழகும் நாம் செய்யும் சில வேலைகளால் கெட்டு போகின்றன.

இரவு அதிக நேரம் கண்விழித்து இருப்பது, அதிக நேரம் டிவி, லேப்டாப் போன்றவற்றை காண்பது போன்றவை கண்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்க கூடியவையாகும்.

தூங்கி எழுந்த பிறகு, இரு கண்களின் ஓரங்களிலும் தோலுடன் ஒட்டிக் கொண்டு கெட்டியான திரவம் போல ஒன்று உருவாகி இருக்கும். அதை நாம் பீழை என அழைக்கிறோம்.

இது அனைவருக்கும் தினமும் கண்களின் ஓரத்தில் உருவாவது இல்லை. சிலருக்கு அதிகமாக உருவாகும். இது ஏன் உருவாகிறது? என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

எப்படி உருவாகிறது

நாம் அழுவதால் கண்கள் உண்மையில் சுத்தமாகிறது. அதே போல நாம் உறங்கும் போது அழும் வாய்ப்புகள் குறைவு. ஆனால், கண்ணீர் உருவாக்கும் அந்த கெட்டியான திரவம் அப்படியே தேங்கி சிறியளவிலான வறண்ட பந்து போல உருவாகி நிற்கும்.

சில சமயங்களில் இது சாதரணமாக தான் இருக்கும். ஆனால், சில சமயங்களில் நமது ஆரோக்கியம் அபாயமாக மாறுவதன் முதல் அறிகுறியாகவும் இது தென்படும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சளி, காய்ச்சல், கண் எரிச்சல் இருக்கும் போது கண்களில் இருந்து பீழை வெளிவரலாம்.

சில சமயங்களில் அதிகமாக வெளிவரும் பீழை காரணமாக கண் பார்வை கோளாறுகள், கண்களில் இரத்தம் வெளிப்படுதல், கண் பார்வை இழப்பு, மற்றும் கருவிழி பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.

கண்ணீர் தினமும் உருவாகும் ஒன்று. மேல் கண் இமை அல்லது கீழ் கண் இமை என கூறப்படும் புன்க்டா புள்ளிகள் திறந்திருந்தால் கண்ணீர் அதிகமாக உருவாகலாம்.

சிலசமயங்களில் இதற்கு மருத்துவ முறைகளால் மட்டுமே தீர்வு காண முடியும். சிறுவர்கள் வளரும் போது சில சமயம் இப்படி நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.