பறித்து செல்லப்பட்ட துப்பாக்கி மீட்பு

1577265980 sri lanka army soldier 2
1577265980 sri lanka army soldier 2

வவுனியா, போகஸ்வெவ முகாமிற்கு அருகில் இராணுவ சிப்பாய் ஒருவரிடம் இருந்து பறித்துச் செல்லப்பட்ட துப்பாக்கி கெகிராவை பிரதேசத்தில் இருந்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

போகஸ்வெவ இராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று அதிகாலை பணி முடிந்து சென்றுக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதோடு அவரின் துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டிருந்தது.

சம்பவத்தில் காயமடைந்த சிப்பாய் சிகிச்சைக்காக அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.