தோல்வியில் முடிந்தது முகப்புத்தகத்தின் திட்டம்!

download 30
download 30

கிரிப்ட்டோ கரன்ஸி எனப்படும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் ஏற்கனவே இணைய உலகில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.

எனினும் இந்த டிஜிட்டல் நாணயத்தினை நாட்டின் அரசாங்கங்கள் அனுமதிக்காததன் காரணமாக பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முகபுத்தக நிறுவனம் லிபாரா எனும் பெயரில் இந்த நாணயத்தினை சில நாடுகளின் அனுமதியுடன் அறிமுகம் செய்வதற்கு தீர்மானித்திருந்தது.

இதற்கான முயற்சிகளில் இறங்கியிருந்த நிலையில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் குறித்த நாணயத்தினை நிராகரித்துள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த அந்நாட்டின் ஜனாதிபதி முகபுத்தகத்தின் கிரிப்ட்டோ கரன்ஸியானது மீள்வடிவமைக்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.