இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய நபர்; பரிதாபமாக உயிரிழப்பு !

download 1 11
download 1 11

மலேசியாவில் இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய நேபாள நாட்டவர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பீதியை கிளப்பியுள்ளது.

47 வயதான இந்த நபர் மலாக்கா மாநிலத்தில் மஸ்ஜித் தனா அருகே மூவருடன் இணைந்து இறைச்சி அரைக்கும் இயந்திரம் ஒன்றை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

திடீரென்று அந்த இயந்திரமானது செயல்படவும், அதில் எதிர்பாராதவிதமாக அந்த நேபாள நாட்டவர் தவறி விழுந்துள்ளார்.

அருகாமையில் இருந்தவர்கள் சுதாரிக்கும் முன்னர் அந்த நபரின் இடுப்பு வரை இயந்திரம் நொறுக்கித் தள்ளியுள்ளது.

அவரின் எஞ்சிய பாகங்களை மீட்க சுமார் 30 நிமிடங்கள் கடும் போராட்டம் நடத்தவேண்டி இருந்தது என கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்