5ஜீ தொழிநுட்பத்தில் புதிய கணனி அறிமுகம்!

625.500.560.350.160.300.053.800.748.160.70
625.500.560.350.160.300.053.800.748.160.70

தற்போது அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் பொதுவாக 5ஜீ தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவே அறிமுகம் செய்யப்படுகின்றன.

அதேபோன்று டெப் சாதனங்களும் 5ஜீ தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக அறிமுகம் செய்யப்படவுள்ளன.

சாம்சுங் நிறுவனம் இவ் வருடத்தின் முதலாவது காலாண்டுப் பகுதியில் தனது முதலாவது 5ஜீ டெப் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

கலக்ஸி டெப் எஸ்6 எனும் டேப்பினையே இவ்வாறு அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த டெப் தொடர்பான சில தகவல்கள் கசிந்திருந்தன.

பிரதான நினைவகமாக 6 ஜீபீ ரம் மற்றும் 128 ஜீபீ சேமிப்பு நினைவகம் என்பவற்றுடனான ஒரு பதிப்பும் 8 ஜீபீ ரம் மற்றும் 256 ஜீபீ சேமிப்பு நினைவகம் என்பவற்றுடனான மற்றுமொரு பதிப்பும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.