துரித உணவுகள் வேண்டாம்;உயிருக்கே ஆபத்து

20 fastfood200
20 fastfood200

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் அபாயம் நேரும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கோழியிறைச்சித் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நவர்ரா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடந்த முதலாவது ஆய்வில், 19 ஆயிரத்து 899 பேர் பத்தாண்டு காலம் கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் பதப்படுத்திய உணவுகளைச் சாப்பிடுவோரில் ஒரு லட்சம் பேரில் 277 பேருக்கு இதயம் தொடர்பான நோய்கள் வந்துள்ளதுள்ளது எனவும் அதைக் குறைவாக சாப்பிடுவோரில் ஒரு லட்சம் பேரில் 242 பேருக்கு இந்தப் பாதிப்பு இருந்தது.

மேலும் பாரீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மதில்டே டவ்வியர், குறைவாகப் பதப்படுத்திய உணவுகளைவிட, அதிகம் பதப்படுத்திய உணவு அதிகம் சாப்பிடுவதால், அடுத்து வரும் ஒவ்வொரு பத்தாண்டிலும் இதயம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்