அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் ஆதரவு பேரணி

usa
usa

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

வெளிநாடுகளிலும் இதுபோன்ற பேரணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் நேற்று பேரணி நடத்தினர்.

இதேபோல், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணியாக சென்றனர்.

அப்போது அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.