குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா !

201611151246162049 SalemNamakkal salt shortage SECVPF
201611151246162049 SalemNamakkal salt shortage SECVPF

உப்பானது மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. உணவில் உப்பு சற்று குறைந்துவிட்டாலும் சரி, அதிகமாகிவிட்டாலும் சரி இரண்டுமே ருசிக்க முடியாது. உப்பு அளவோடு இருந்தால் தான் உணவும் சரி, மனிதனின் உடலும் சரி ஆரோக்கியமாக இருக்கும்.

அப்படி, சாப்பாடு மட்டுமில்லாமல் நாம் குளிக்கும் தண்ணீரிலும் கொஞ்சம் உப்பு சேர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து குளித்தால் உடலில் இருக்கும் தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும். குறிப்பாக சொறி சிரங்கு இருப்பவர்கள் இப்படி செய்தால் கிருமிகள் அழிந்துவிடும்.

தசைகளில் ஏற்படும் காயங்களை போக்க இந்த குளியல் உப்பு உதவுகிறது. எனவே உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாக வைக்க இது சிறந்தது.

இந்த குளியல் உப்பை கொண்டு நீங்கள் சீக்கிரம் வயதாகுவதை தள்ளிப் போடலாம். இது வயதாகுவதை மெதுவாக்குகிறது.

மேலும், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் இருப்பவர்கள் தண்ணீரில் சிறிது உப்பு காலத்து குளிப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நீரில் உப்பு சேர்த்து குளித்தால் அன்றைய நாள் சுபமாகும் என்பது ஜதீகம்.