மல்லிகை பூவில் உள்ள மருத்துவ குணங்கள்

61JIawAiH0L. SX425
61JIawAiH0L. SX425

கண்களை கவர்ந்து மனதை மயக்கும் மல்லிகை பூவில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது .

தினமும் பெண்களின் தலையில் இந்த பூவினை சூடுவதால் உடலின் சூடு தணியும்.

வாய்ப்புண் இருப்பவர்கள் பூவின் இலையினை சாப்பிட்டால் வாய்புண் குணமாகும் .

மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

மல்லிகை வேர்த்தூளையும்.வசம்புத்தூளையும் பழச்சாறு கலந்து பூச தோல் நோய்கள் தீரும்.

உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.