அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய இளையோர் அணி

99871914 gettyimages 913601396
99871914 gettyimages 913601396

19 வயதுக்குட்பட்ட இளையோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

19 வயதுக்குட்பட்ட இளையோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்காவில் நடைபெறுகிறது.

தொடரின் முதல் காலிறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான இந்தியாவும் முன்னாள் சம்பியனான அவுஸ்திரேலியாவும் மோதின.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா சார்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 ஓட்டங்களை பெற்றார்.

அதர்வ அங்ஹோல்கர் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் ரவி பிஷோனி 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய இளையோர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய இளையோர் அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாம் பான்னிங் 75 ஓட்டங்களை பெற்றார்.

லியாம் ஸ்கோட் 35 ஓட்டங்களை பெற்றார்.

ஏனைய வீரர்களால் பிரகாசிக்க முடியாமல் போனது.

அவுஸ்திரேலிய இளையோர் அணி 43.3 ஓவர்களில் 159 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

கார்த்திக் தியாகி 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆகாஷ் சிங் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

போட்டியில் 74 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய இளையோர் அணி முதல் அணியாக அரையிறுதிக்குத் தெரிவானது.

இந்தத் தொடரில் இந்திய இளையோர் அணி நடப்பு சம்பியனாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.