முகேன் ராவிற்கு மலேசியாவில் உற்சாக வரவேற்பு!

mugen
mugen

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-3 இன் வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்டு நாடு திரும்பிய முகேன் ராவிற்கு மலேசியாவில் உறவினர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 3 ல் இம்முறை மலேசியாவின் முகேன் ராவ், ஈழத்தின் தர்ஷன், லொஸ்லியா என அறிமுகம் இல்லாதவர்கள் உட்பட 16பேர் பங்கேற்றிருந்தனர். இதனால் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சீசனில் மலேசியாவின் முகேன் ராவ் வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்டதுடன் ரூபா50 லட்சத்தினை பரிசுத் தொகையாக பெற்றுக்கொண்டார்.

பிக்பாஸ் பட்டத்தை வென்ற முகேன் ராவ் நேற்று மலேசியாவுக்கு திரும்பினார். அங்கு பத்துமலை முருகன் கோவில் முன்பாக திறந்த வாகனத்தில் ஏறி நின்று வெற்றி பெற்ற பிக்பாஸ் கோப்பையை ரசிகர்களிடம் காட்டி அன்பைப் பெற்றுக்கொண்டார்.

அப்போது பேசிய முகேன் ராவ், பிக்பாஸ் போட்டியில் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு ஆதரவு அளித்த அத்தனை மலேசிய மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்திருந்தார்.

முன்னதாக முகேன் ராவை வரவேற்க கோலாலம்பூர் விமான நிலையத்தில் பல மணிநேரம் ரசிகர்கள் காத்திருந்து உற்சாக வரவேற்பு கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.