ஆர்யாவுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்

aarya
aarya

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்து வரும் ‘டெடி’ படத்தில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்த சாக்‌ஷி அகர்வால் நடித்து வருகிறார்.

இதனை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

‘டிக் டிக் டிக்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் ‘டெடி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இவர்களுடன் சதீஷ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.