வில்லியாக Bigg Boss சாக்‌ஷி அகர்வால்

shakshi
shakshi

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது உருவாகி இருக்கும் பேய் படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார்.

ராய் லட்சுமி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சிண்ட்ரெல்லா’ திகில் பேய்ப் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும். அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு இப்படப் பாத்திரம் எதிர்பாராத தோற்ற மாற்றம் தரும். நடிப்பிலும் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும் படமாக ‘சிண்ட்ரெல்லா’ இருக்கும்.

சாக்‌ஷி அகர்வால் ஒரு எதிர்பாராத எதிர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் ஏற்றுள்ள வில்லி பாத்திரம் திரையில் தீப்பிடிக்க வைக்கும்படியான பரபரப்புடன் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.